புத்தாக்கத்திறனையும் கற்பனையாற்றலையும் வளர்க்கும் Yarl IT Hubஇன் Maker Spaceல் ஆர்வத்துடன் பங்குபற்றும் கிளிநொச்சி மாணவர்கள்.
தொழில்நுட்பம் வேகமாக முன்னேறி வரும் சகாப்தத்தில் புத்தாக்கமானது சமூக முன்னேற்றத்திற்கான உந்து சக்தியாக மாறி வருகிறது.படைப்பாற்றல், கற்றல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு புதிய எண்ணக்கரு உருவாகியுள்ளது. இந்த எண்ணக்கரு “Makerspace” ஆகும். Makerspace ஆனது எல்லா வயதுப்பின்னணியிலும் உள்ள மாணவர்கள் தங்கள் கற்பனைக் எண்ணக்கருக்களை உருவாக்கவும், உயிர்ப்பிக்கவும் உதவும் ஒரு சமூக மையமாகும். Makerspace என்பது சுயபுத்தாக்கம் மற்றும் ரோபாட்டிக்ஸ் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு துறைகளில் பரிசோதனை மற்றும் ஆய்வுகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த எண்ணக்கரு வடிவமைக்கப்பட்டுள்ளது.
Makerspace அனுபவத்தினுடான கற்றலை ஊக்குவிக்கின்றன வகையில், மாணவர்கள் நடைமுறையில் ஈடுபட அனுமதிக்கிறது.சமீபத்திய ஆண்டுகளில்,”Maker Space” என்று அழைக்கப்படும் ஒரு வளர்ந்து வரும் எண்ணக்கரு வேகத்தைப் பெற்றுள்ளது.Makerspace நிகழ்வானது YARLITHUB நிறுவனத்தினால் இனால் இலாபநோக்கற்ற முறையில் தொடங்கப்பட்டு கிளிநொச்சி,யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகின்றது.
இந்த நிகழ்வானது Kilinochchi(uki) இல் 31 மார்ச் 2023 அன்று ஆரம்பிக்கப்பட்டு வயது அடிப்படையில் மூன்று பிரிவுகளாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் நடைபெற்று வருகின்றது.
வயதுப்பிரிவு 1- 6 முதல் 8
வயதுப்பிரிவு 2–9 முதல் 12
வயதுப்பிரிவு 3–13 முதல் 18
இந்நிகழ்வில் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் பல்வேறு வயதுப்பிரிவு மாணவர்கள் வருகை தந்து மிக ஆர்வத்துடன் கலந்துகொள்கின்றனர்.ஒவ்வொரு வாரத்துக்கான செயற்பாடுகளும் மாணவர்களின் திறமையை அதிகரிக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டு நடாத்தப்படுகின்றது.இது வரை நடைபெற்ற Makerspace நிகழ்வுகளில் Application of Sensors, Application of science,சுவராக்கங்கள்,கழிவுப்பொருட்களை பயன்படுத்தி கண்டுபிடிப்புக்கள் போன்ற பல விடயங்கள் பரிசோதனை ரீதியாகவும் அனுபவ முறையிலும் அறிவூட்டப்பட்டது. Motors, Battery, Wires, Switch, Fans,cardboard என்பவற்றை பயன்படுத்தி Motor car and Elastic car,Elastic Helicopter,Smart Home,Lava Lamp, என்பன செய்யப்பட்டது. இதன் மூலம் மாணவர்கள் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பனபற்றியும் அவை எவ்வாறு இயங்குகின்றன, என்பது பற்றியும் அறிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது.மேலும் அப்பொருள்களைப்பயன்படுத்தி ரோபோவின் பாகங்களின்(Robotic Hand) அமைப்புக்கள் சில செய்யப்பட்டது.மற்றும் அவை எவ்வாறு இயங்குகின்றன என்பது பற்றிய விளக்கங்களும் வழங்கப்பட்டது.மாணவர்கள் அவற்றை தாமேசெய்து பார்த்து கற்றுக்கொள்ள கூடியதாகவும் இருந்தது.அத்துடன் மாணவர்கள் வீட்டில் உள்ள பொருட்களையும்,கழிவுப்பொருட்களைப் பயன்படுத்தி நாம் அன்றாடம் பயன்படுத்த கூடிய பொருட்களாகவும், புத்தாக்கம்களாகவும் மாற்றுவதற்கான சிந்தனைகளைப் பெற்றுக்கொள்ள கூடியதாகவும் அதைச்செய்து பயன்படுத்த கூடிய ஆற்றலையும் பெற்றுக்கொள்ள கூடியதாக இருந்தது.
அத்துடன் 13 தொடக்கம் 18 வயது பிரிவினருக்கு ஆரம்பத்தில் Motors,Battery,Wires,Switch மற்றும் ஏனைய Electronic பொருட்களைப்பயன்படுத்தி புத்தாக்கம்களும் சிந்தனைகளும் வழங்கப்பட்டதுடன் தற்பொழுது Arduino Board,Sensors,Electronic kits and Laptops இனைப்பயன்படுத்தி தொழில்நுட்ப ரீதியில் உருவாக்கக்கூடிய புதிய படைப்புகளைப் பற்றிய சிந்தனைகளையும் அதற்க்காக அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்ற விளக்கங்களும் கொடுக்கப்பட்டதன் பின்னர்,Ultrasonic Sensor இனைப்பயன்படுத்தி Smart Dustbin செய்துகாட்டப்பட்டதுடன் அதை எவ்வாறு செய்வது என்பது தொடர்பான விளக்கம்களும் வழங்கப்பட்டது இதன் மூலம் Sensor பற்றிய அறிவை மாணவர்கள் பெற்றுக்கொள்ள கூடியதாக இருந்தது.
மாணவர்களின் புத்தாக்க திறனை அதிகரித்து அவர்களின் கற்றல் அனுபவத்தை அதிகரிப்பதே Makerspace இன் குறிக்கோள் ஆகும். மாணவர்கள் தங்கள் யோசனைகளை ஆராய்வதற்கும் மற்றவர்களுடன் ஒத்துழைப்பதற்கும் இது ஒரு தளமாக அமைவதுடன் உடல் மற்றும் அறிவுசார் விளையாட்டிற்கான களத்தை உருவாக்கிக்கொடுப்பதன் மூலம், Makerspace ஆனது கல்வி மற்றும் சிக்கலைத் தீர்க்கும் எதிர்காலத்தை வடிவமைக்கும் திறனைக் கொண்ட பிள்ளைகளை உருவாக்குவதில் பங்காற்றுகின்றது.
இந்நிகழ்வில் பங்குபற்ற ஆர்வமுள்ளமாணவர்கள் உங்கள் விண்ணப்பங்களை எங்களுக்கு அனுப்பி வைக்கமுடியும்.
மேலதிக தொடர்புகளுக்கு: 0770740108 | event@yarlithub.org