300% மாணவர்களின் அதிகரிப்புடன் வெற்றிகரமாக நடந்து முடிந்த யாழ் கீக் சலன்ச் பருவகாலம் 12 .

Yarl IT Hub
5 min readJul 17, 2023

Yarl geek challenge என்பது வட மாகாண மாணவர்களிடையே புத்தாக்கத்திறனை ஊக்குவிப்பதற்காகவும் கணினியின் உதவியுடன் நாளாந்த பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனை வளர்ப்பதற்காகவும் Yarl IT Hub என்ற தன்னார்வலர் அமைப்பினால் வருடாந்தம் நடாத்தப்பட்டுவரும் ஒரு போட்டியாகும். கடந்த 12 வருடங்களாக இப்போட்டியினை வடமாகாண கல்வித்திணைக்களத்துடன் இணைந்து வடமாகாணத்தில் உள்ள 13 கல்வி வலயங்களிலும் காணப்படும் பாடசாலைகளுக்கு நடாத்தப்பட்டுவருகின்றது

போட்டி முறை

இம் முறை போட்டியானது மாணவர்களிடையே நான்கு பிரிவுகளில் நடைபெற்றது.

 1. இணையத்தளம்/இணையத்தள செயலி (Web Application development) — மாணவர்கள் தாங்கள் இனங்காணும் ஒரு பிரச்சனைக்குக்குரிய தீர்வை Web application ஒன்றின் ஊடாக முன்வைக்கலாம்
 2. திறன்பேசிக்கான செயலி (Mobile Application Development) — மாணவர்கள் தாங்கள் இனங்காணும் ஒரு பிரச்சனைக்குக்குரிய தீர்வை ஏதாவது ஒரு இயங்குதளத்திற்குரிய Mobile application ஒன்றின் ஊடாக முன்வைக்கலாம்
 3. வன்பொருட் செயலி (Hardware Development) — மாணவர்கள் தாங்கள் இனங்காணும் ஒரு பிரச்சனைக்குக்குரிய தீர்வை Hardware application ஒன்றின் ஊடாக முன்வைக்கலாம்
 4. விஞ்ஞான பிரயோகம் (Application of Science) — மாணவர்கள் தாங்கள் இனங்காணும் ஒரு பிரச்சனைக்குக்குரிய தீர்வை விஞ்ஞானத்தின் பிரயோகம் மூலமான தயாரிப்பு ஒன்றாக முன்வைக்கலாம்

இப் போட்டியில் மாணவர்கள் தனி நபராகவோ அல்லது ஒரு பாடசாலையில் கல்வி கற்கும் மூன்று மாணவர்கள் சேர்ந்த ஒரு குழுவாகவோ பங்கு பற்ற முடியும்.

ஆரம்பம்

(Date) ஆம் திகதி இவ் வருட yarl geek challenge Season 12 junior ஆனது அதிகாரப்பூர்வமான அறிவிப்புடன் தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து Yarl IT Hubஇன் தன்னார்வலர்களால் அனைத்து கல்வி வலயங்களிலும் போட்டி தொடர்பான செயலமர்வுகளும், workshopஉம் நடத்தப்பட்டது.இச்செயலமர்வுகளில் இப்போட்டிப் பிரிவுகள் பற்றிய ஒரு அறிமுகம். மற்றும் எவ்வாறு ஒரு பிரச்சனையை இனம் காண்பது. அந்த பிரச்சனையைக்குரிய தீர்வினை எப்படி கண்டறிவது பற்றிய அறிவு வழங்கப்பட்டது..

2500க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தச் செயலமர்வுகளில் பங்கு பற்றினார்கள், மாணவர்கள் தங்களுடைய சந்தேகங்கள் மற்றும் YGC பற்றிய வினாக்களையும் Yarl IT Hub தன்னார்வலர்களிடம் இருந்து அறிந்து கொள்வதற்கு இந்த அமர்வுகள் பெரிதும் உதவியது.

தொடர்ச்சியாக, 2 ஜூன் 2023 ஆம் திகதி, மாணவர்களிடம் இருந்து YGC ஜூனியர் 12 போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன.இம் முறை இப் போட்டிக்கு 130க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் இருந்து 750க்கும் மேற்பட்ட அணிகள் விண்ணப்பித்தார்கள். கடந்த வருடம் விண்ணப்பித்த மாணவ அணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது 300% வீதம் கூடுதலாகும்.

விண்ணப்பித்த மாணவர்களுக்கு அவர்கள் விண்ணப்பித்த பிரிவில் சிறப்பு பயிற்சி பட்டறைகளும் அவரவர் கல்வி வலயங்களில் ஒழுங்கு செய்யப்பட்டன.

வலய மட்ட போட்டிகள் நடைபெறும் வரை மாணவர்கள் தங்கள் செயற்திட்டங்களில் ஏதும் இடர்களை எதிர்நோக்கும் போதும், Yarl IT Hubஇனை அனுகும் போது அவர்களுக்கு mentorகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.

வலய மட்ட போட்டிகள் .

வலயமட்ட போட்டியானது வடமாகாணத்தில் 13 கல்வி வலயங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 17 ஜூன் 2023ஆம் திகதி சனிக்கிழமையன்று யாழ்ப்பாணம், வடமராட்சி, துணுக்காய், கிளிநொச்சி தெற்கு, வவுனியா தெற்கு, மன்னர், மடு ஆகிய 7 கல்வி வலயங்களில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 18 ஜூன் 2023ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று வலிகாமம், தென்மராட்சி, தீவகம், வவுனியா வடக்கு, கிளிநொச்சி வடக்கு மற்றும் முல்லைதீவு ஆகிய வலயங்களில் நடைபெற்றது. மாணவர்கள் தத்தமது படைப்புக்களை மிகச்சிறப்பாக காட்சிப்படுத்தினர். இவ் வலய மட்ட போட்டிகளுக்கு 90 பாடசாலைகளில் இருந்து 728 மாணவர்கள் 374 அணிகளாக போட்டியிட்டனர். வலயமட்டத்திலிருந்து 87 அணிகள் இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தன. இதில் 20 அணிகள் இணையதளம் பிரிவில் இருந்தும், 20 அணிகள் திறன்பேசி பிரிவில் இருந்தும், 23 அணிகள் வன்பொருள் பிரிவில் இருந்தும், 24 அணிகள் விஞ்ஞான பிரயோகம் பிரிவில் இருந்தும் தெரிவு செய்யப்பட்டன.

ஒப்பீட்டு அளவில் பார்க்கும் போது, இம்முறை வன்பொருள் மாற்றும் விஞ்ஞான பிரயோகம் பிரிவுகளில் இருந்து அதிகளவான அணிகள் பங்கேற்றன, இதற்க்கு ஒரு முக்கிய காரணமாக Yarl IT Hubஇனால் மாணவர்களிடையே அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பயணங்களை அவதானிக்க கூடியதாக இருந்தது.

இறுதிப்போட்டி

வலய மட்ட போட்டியை தொடர்ந்து, Yarl Geek Challenge பருவ காலம் 12இன் இறுதிப்போட்டி ஜூலை 1ஆம், 2ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் அமைந்து இருக்கும் தந்தை செல்வா கலையகத்தில் நடைபெற்றது.ஜூலை 1ஆம் திகதி காலை 8.30 மணி தொடக்கம் மாணவர்கள் வருகை தர தொடங்கியிருந்தார்கள். அவர்களின் பதிவுகள் முடிந்ததும், குழுப்புகைப்படங்கள், தனிப்புகைப்படங்கள் என்பன எடுக்கப்பட்டு தொடர்ந்து தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்விபயிலும் Yarl IT Hub இன் தன்னார்வலர்களால் இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய அணிகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. அதே போல அனைத்து அணிகளுக்கும் தமது செயற்திடடங்களை எவ்வாறு குறித்த நேர அளவிடையில் அளிக்கை செய்வது (Pitching Practice) என்ற பயிற்சியும் வழங்கப்பட்டது. போட்டி மனநிலையில் இருந்து மாணவர்களை குளிர்மைப்படுத்த குளிர்களியும் உண்டு அடுத்த நாள் நடைபெறவிருக்கும் இறுதிப்போட்டிக்கு தங்களை தயார்ப்படுத்திக்கொண்டு தன்னம்பிக்கையோடு விடைபெற்றனர்.

தொடர்ந்து ஜூலை 2ஆம் திகதி காலை 8.30 தொடக்கம் மதிப்பீடுகள் நடைப்பெற்றது. மதிப்பீடுகள் 4 பிரிவுகளுக்கும் தனி தனியாக நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவுக்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 3வர் கொண்ட மதிப்பீட்டாளர்கள் அணி கடமையாற்றியது. மாணவ அணிகளுக்கு 4 நிமிடங்கள் தமது செயற்திட்டம் பற்றி அளிக்கை செய்யவும் தொடர்ந்து 2 நிமிடங்கள் கேள்வி விடைகளுக்கும் வழங்கப்பட்டது.

இணையத்தளம்/இணையதள செயலி பிரிவுக்கு Dr. Charles, Dr. Jananie, Mr.Jayakrishnan ஆகியோரும், திறன்பேசிக்கான செயலி பிரிவுக்கு Prof. Roshan, Dr. Nirthika, Mr.Prasanth ஆகியோரும் வன்பொருட் செயலி பிரிவுக்கு Dr. Kaneswaran, Dr. Thanikaichelvan, Mr.John Nirajh ஆகியோரும் விஞ்ஞான பிரயோகம் பிரிவுக்கு Dr. Suvanthini, Miss.Niruparani, Dr. Shriparan ஆகியோரும் இந்தமுறை மதிப்பீட்டாளராக கடமையாற்றினார்கள்.

ஒவ்வொரு பிரிவிற்கும் ஒவ்வொரு வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன், நடுவர்களால் சில சிறந்த படைப்புக்களுக்கு சிறப்பு விருதுகளும் வழங்கி மாணவர்கள் ஊக்கப்படுத்தப்பட்டனர்.

வெற்றியாளர்கள்

Best Mobile Application

Karunaharan Sharavanapriyan, Sivakumar Adchayan, Manivannan Pirajiit (J/Jaffna Hindu College).

Best Web Application

Prabakaran Niththilan (Kn/Kilinochchi Central College).

Best Hardware application

Sasikumar Kayalventhan, Nallanathan Tharanigan, Thavarasa Theiveehan”(Kn/Kilinochchi Maha Vidyalayam).

Best Application of Science

Yogeswaran Ketheeswaran (J/Aliyawalai C.C.T.M.S).

இவற்றை தவிர இன்னும் 8 அணிகளுக்கு மதிப்பீட்டாளர்களால் சிறப்பு விருதுகளும் தரப்பட்ட்து

 • Mayuri Prabagar, Ananthavaikary Janarthanan, Ilanko Marilynjothini from J/Vembadi Girls’ High School
 • Jesikanthan Mathusikan, Thavarasa Ajinth, Kaneswaran Jishy from J/Uduthurai Maha Vidyalayam
 • Kandeepan Sangeerthan, Suventhan Ayush, Suthakaran Thushan from J/Hartley College
 • Mariyathas Lathushnan, Benedict Fernando Dhanushanth, Prabaharan Ann Abisan from Mn/St.Xavier’s Boys’ College
 • Suthaharan Elilkumaran from J/Hartley College
 • Theiventhiran Antan Nainas from Mn/St.Xavier’s Boys’ College
 • Mathanamohanaraj Nirosh from J/Mahajana College
 • Naakenthiran Piranavan from Mu/Pandiyankulam Maha Vidyalayam

புதிய பயணங்கள் பரிசில்

மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான சிறந்த ஒரு வாய்ப்பாக காணப்படும் இச்செயத்திட்டம் மாணவர்களின் கண்டுபுடிப்புகளிட்டு ஒரு அங்கிகாரத்தையும் வழங்குகின்றது.. இப்புதிய பயணங்கள் செயட்திட்ட மானது 10 முதல் 14 வயது மாணவர்களுக்கு புதிய கண்டுபிடிப்புகளின் அறிமுகம், தொழில்நுட்பம், பிரச்சனை தீர்த்தல் முகாமைத்துவம், செயட்திட்ட முகாமைத்துவம், மற்றும் steam போன்ற விஷயங்களை அறிமுகப்படுத்தி கற்பிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது.இன்றைய 21ம் நூற்றாண்டிற்கு தேவையான திறன்களை வளர்த்து அவர்களை தயார்படுத்தும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாக காணப்படுகிறது.

இப்புதிய பயணங்கள் செயல்திட்டம் மூலம் மாணவர்களுக்கு அவர்களின் ஆர்வங்கள் மற்றும் படைப்பாற்றல்களை வெளிகொண்டு வருவதற்கு ஒரு சிறந்த தளம் ஒன்றை வழங்குகின்றது. இது அவர்களின் ஆர்வங்களை அவர்களே ஆராய வைக்கிறது.புதிய பயணங்கள் தொழில்நுட்பம் மற்றும் உலகின் புதுமைகளை வெளிப்படுத்த மாணவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகின்றது.

இம் முறை இப் புதிய பயணங்களின் பருவகாலம் 2 நடைபெற்றது, இப் செயற்திட்டத்தினை முதலாவதாக முடித்த 100 மாணவர்களுக்கு சிறப்பு பரிசில் வழங்கும் நிகழ்வும் இம்முறையும் நடைபெற்றது. அதே போல புதிய பயணம் செயற்திட்டத்தில் கூடிய ஆர்வம் காட்டிய பாடசாலைகளுக்கும் விருதுகளும் வழங்கப்பட்டது.

--

--

Yarl IT Hub

Yarl IT Hub is a not for profit social enterprise focused on fostering innovation, entrepreneurship and technology in Jaffna.