Yarl Geek Challenge ஜூனியர்-10 இறுதிப் போட்டியுடன் ஒரு தசாப்தத்தை எட்டிய YGC Junior.
ஜூன் மாதம் 26ஆம் திகதி நடைபெற்ற வலய மட்ட போட்டியை தொடர்ந்து(வலய மட்ட போட்டி பற்றிய கட்டுரையை இங்கே பார்வையிடலாம் ), YGC ஜூனியர் இறுதிப் போட்டி கடந்த 10 ஆம் 11 ஆம் திகதிகளில் நிகழ்நிலையில் நடைபெற்றது. வட மாகாணம் முழுவதிலும் இருந்து 31 அணிகள் இறுதிப்போட்டிக்குத் தெரிவாகி போட்டியிட்டிருந்தனர்.
YGC இறுதி நிலை மதிப்பீட்டிற்கான குழுவானது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 7 சிறந்த மதிப்பீட்டாளர்களை கொண்டிருந்தது. Prof. Roshan Ragel, Dr. Murugadas Thanihaichelvan, Dr. Shanmuganthan Thananjeyan, Mr. Sriskandarajah Shriparen, Mr. Sivapathasundram Tharmaseelan , Mr. Emilianuspillai Amirthanathan Gnanaseelan and Mr. Arulsodhy Thusyanthan ஆகியோர் இறுதிப் போட்டிக்கு மதிப்பீட்டாளர்களாக செயற்பட்டனர்.
மாணவர்கள் Web, Mobile, Hardware, Innovation, and Application of Science ஆகிய பிரிவுகளின் கீழ் தங்கள் புத்தாக்கங்களைக் காட்சிப்படுத்தினர். ஒவ்வொரு பிரிவிற்கும் ஒவ்வொரு வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன், நடுவர்களால் சில சிறந்த படைப்புக்களுக்கு சிறப்பு விருதுகளும் வழங்கி மாணவர்கள் ஊக்கப்படுத்தப்பட்டனர்.
பயணக் கட்டுப்பாடுகளினால் மாணவர்கள் பல சவால்களுக்கு முகம் கொடுத்திருந்தாலும் , ஒவ்வொரு மாணவரும் தங்களுடைய புத்தாக்கங்களை தங்களுடைய அறிவினையும் தேடலின் மூலமும் மிகச் சிறந்த முறையில் வடிவமைத்து இறுதிப் போட்டியில் போட்டியிட்டிருந்தனர் .அவர்களது சவால்களை முகம் கொடுக்கும் மனத்துணிவு பாராட்ட பட வேண்டிய ஒன்றாகும்.மேலும் இப்போட்டியில் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்திய அனைத்து மாணவர்களுமே ஒருவகையில் வெற்றியாளர்கள் தான்.
வெற்றியாளர்கள்

Best Mobile Application
டட்லி தர்மிகன், ஷோபனா டட்லி மற்றும் டட்லி சதோசிகன்(வ/தமிழ் மஹா வித்தியாலயம்).
இவர்கள்,தமிழ் அரிச்சுவடி கொண்ட ஒரு செயலியை உருவாக்கி இருந்தார்கள்.இதில் தமிழ் நெடுங்கணக்கில் உள்ள எழுத்துக்களும் அவற்றால் உருவாகும் சொற்களும் சொற்பதங்களும் உள்ளடக்கப்பட்டிருந்தன.
Best Application of Science
சிவனேசன் ஷினோஜன் மற்றும் மோகன் அர்ஜுன்(யா /ஹார்ட்லி கல்லூரி).
இவர்கள் வீட்டில் இருக்கும் வெற்று பிளாஸ்டிக் போத்தல்களை கொண்டு தமக்கான vacuum cleaner ஒன்றை வடிவமைத்து இருந்தனர்.
Best Innovation
ராஜசேகரன் கனிந்திரன்( யா /புனித பத்திரிசியார் கல்லூரி)
இவர் ஒரு ஜீப் மாதிரியை வடிவமைத்து இருந்தார்.விலை உயர்ந்த இறக்குமதி செய்யப்படும் ஜீப் வகைகளுக்கு பதிலாக உள்ளூரில் ஜீப் மாதிரிகளை உருவாக்குவதே இவரது நோக்கமாக இருந்தது.
Best Hardware application
அனுரகாந்தன் விஸ்வகாந்தன், அரவிந்தன் வேணுகன் மற்றும் சுதரன் அருட்குமாரன்(யா /ஹார்ட்லி கல்லூரி).
இவர்கள் ஒரு ஸ்மார்ட் கிளாஸை உருவாக்கினர், ஸ்மார்ட் கைக்கடிகாரங்களைப் போலவே, மொபைலுடன் நேரடியாக இணைக்கக்கூடிய மூக்குக்கு கண்ணாடிகளுடன் இணைக்கக் பட்ட ஒரு display மாதிரி இதுவாகும்.
Best Web Application
நிமலன் குருஷங்கர், ஸ்ரீஹரன் அபிசன் மற்றும் கியூபர்ட் காலின்ஸ் ரோமேஷியன்( யா/பரியோவான் கல்லூரி).
இவர்கள், மென்பொருள் நிறுவனங்களை மென்பொருள் பொறியியலாளர்களுடன் இணைக்க ஒரு வலைத்தளத்தை உருவாக்கினர்.
சிறப்பு விருது பெற்ற மாணவர்கள்

1. யாழ்ப்பாணக் கல்லூரியைச் சேர்ந்த பிரவீணன் பரமேஸ்வரன் மற்றும் சேயவன் யாதவன்.
இவர்கள் ஆசிரிய ஆலோசகர்கள் பயன்படுத்தும் விதமாக தகவல் மற்றும் ஆவணங்களை சேமிக்க கூடிய ஒரு செயலியை வடிவமைத்து இருந்தனர்.
2. யாழ்ப்பாணக் கல்லூரியைச் சேர்ந்த உதயன் கிசாந்த் மற்றும் சுவர்னிகா உதயன் ஆகியோர் தானியங்கி கை சுத்திகரிக்கும் கருவியினை(Automated hand sanitizer) வடிவமைத்து இருந்தனர்.
3. யாழ்ப்பாண இந்து கல்லூரியைச் சேர்ந்த ஜனார்த்தனன் சஜீவன், நந்தகுமாரன் கிருஜன் மற்றும் சத்தியநாராயணன் அக்க்ஷேயன்.
இவர்கள் DIY Bluetooth RC control car and DIY Arduino line follower car வடிவமைத்து இருந்தனர்.
4. கொக்குவில் இந்து கல்லூரியைச் சேர்ந்த திருகேதீஸ்வரன் உமைபாலா.
இவர் பாடசாலை ஆவணங்களை நிர்வகிக்க கணினி மயப்படுத்தப்படட ஒரு செயலியை உருவாக்கி இருந்தார் .
வலய மட்ட வெற்றியாளர்கள்

யாழ்ப்பாண வலய வெற்றியாளர் : Arduino and Ultrasonic sensor மூலம் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கியதற்காக யாழ்ப்பாண இந்து கல்லூரியைச் சேர்ந்த அருளானந்தம் தரனிகன் தேர்வுசெய்யப்பட்டார் .
வலிகாம வலய வெற்றியாளர்: கொவிட் நோயாளிகளுக்கான உயர் தொழில்நுட்ப அறையின் மாதிரியை உருவாக்கியதற்காக யாழ்ப்பாண கல்லூரியைச் சேர்ந்த சிவகுமார் சாத்வீகன் தேர்வுசெய்யப்பட்டார்.
வடமராச்சி வலய வெற்றியாளர்: விவசாயிகள் மற்றும் நுகர்வோரை நேரடியாக இணைக்கும் ஒரு வலைத்தளத்தை உருவாக்கியதற்காக யாழ்ப்பாண ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த காமிலஸ் கவின்வலன் தேர்வுசெய்யப்பட்டார்.
வவுனியா தெற்கு வலய வெற்றியாளர்கள்: குரங்குகள் மற்றும் பிற விலங்குகளிடமிருந்து தோட்டங்களை பாதுகாக்கும் ரேடரை உருவாக்கியதற்காக லெனின் அறிவழகன் மாதுர்ஷன் மற்றும் லெனின் அறிவழகன் மாதுலன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர் .
மன்னார் வலய வெற்றியாளர்: மன்னார் சித்தி விநாயகர் இந்து கல்லூரியைச் சேர்ந்த மொஹமட் முஹீத் சுக்ரி அகமது தனது சுற்றுலா வழிகாட்டி வலைத்தளத்திற்காக தேர்வுசெய்யப்பட்டார்.
இவ் மாணவர்கள் அனைவரும் தமது மாதிரிகளை மேலும் பல தொழில்நுட்ப முறைகளை கையாண்டு போட்டிகள் முடிவுற்றாலும் தமது ஊக்கத்தின் மூலம் சிறப்பாக வடிவமைத்து தொழில்நுட்ப தன்னார்வலர்களாக வளருவார்கள் என்று நாம் திடமாக நம்புகிறோம் .போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் பங்கு பற்றிய மாணவர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறோம்!